Thursday, March 12, 2026
HomeUncategorizedமுதலமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

முதலமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டசபையில் நேற்ரு அறிவிப்புகளை வெளியிட்டார். பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து இருந்தது. 

அந்த கோரிக்கை நிறைவேற்றும் வகையில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்ற அறிவிப்பினை  மாண்புமிகு அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்து இருப்பது
பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு பயன் அளித்து உள்ளது. 
மேலும்,

முதலமைச்சர் அறிவுரையின் பேரில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு  இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments