Saturday, March 7, 2026
HomeUncategorizedமுதலமைச்சருக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் நன்றி

முதலமைச்சருக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் நன்றி

இதுதொடர்பாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்ட காலம் பணிக்காலமாக கருதப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில்  2017 முதல் 2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக கருத்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் 

இதனை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக  மனதார வரவேற்கின்றோம். நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்நாடு இடைநிலை  ஆசிரியர் சங்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் அ.சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… 

தமிழக அரசு 110 விதியின் கீழ் 13 அறிவிப்புகள் வரவேற்பை பெற்றாலும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின்  நீண்ட கால கோரிக்கையும்,  தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாத கோரிக்கையுமான  அரசுப் பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி,
உயர்,மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும்  அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரியாசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி,தரம் உயர்த்தப்பட்ட பணியிடத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது

கல்வி மானியக் கோரிக்கைகளையும், 110 விதிகளில் அறிவிப்புகளையும் எதிர்பார்த்த உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுமாறும், நிதிச்சுமையில்லாத கோரிக்கை என்பதால் இடம்பெறும் என இயக்கத்தின் சார்பாக    அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்தோம் 

ஆனால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் விடிவெள்ளியாக திகழும்  தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில மையம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.மேலும்

 அகவிலைப்படி 01/07/2021 முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். கொரோனா நோய்தொற்று காலத்தில் அரசோடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எவ்வித தொய்வின்றி பயணித்தோம் என்பது தாக்கல் அறிந்ததே!  பழைய ஓய்வு திட்டத்தை ரத்து செய்வதற்கான முன் அறிவிப்புகள் இருந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள் சிறப்பாக இருந்திருக்கும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது 

1.1.2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும். 2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும் 

வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்  

அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்   அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும் 

புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும். சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும். 

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்.  போன்ற 13 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் இதனை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக வரவேற்கிறோம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments