Saturday, March 14, 2026
HomeUncategorizedமுதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம்

முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம்

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்பு இடங்களை, தனியாருக்கு நிகராக ஏன் அதிகரிக்கவில்லை’ என, முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை என தலா ஒரு மருந்தியல் கல்லுாரி; ஆறு செவிலியர் கல்லுாரிகள் உட்பட, துணை மருத்துவ படிப்புகளுக்கு, 14 கல்லுாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. இவற்றில், 608 இடங்கள் உள்ளன.

அதேநேரம், 391 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 21,190 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. தனியார் கல்லுாரிகளில் துணை மருத்துவம் படிக்க, 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

இதனால், ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஏன் துணை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவில்லை என கேள்வி எழுப்பி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments