Saturday, April 4, 2026
HomeUncategorizedமுதன் முறையாக ஒரு இந்தியர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற நாள்

முதன் முறையாக ஒரு இந்தியர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற நாள்

இதே செப்டம்பர் 4, 1987 – முதன் முறையாக ஒரு இந்தியர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற நாள் சதுரங்க விளையாட்டு என்றவுடன் நமது நினைவிற்கு வருபவர் விஸ்வநாதன் ஆனந்த்.

விஸ்வநாதன் ஆனந்த் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில், 1969, டிசெம்பர் 11ம் நாள் பிறந்தார். இவர் சதுரங்க உலகின் கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார்.

இவர் தனது, 14 வயதில் 1983இல் 9/9 புள்ளிகள் பெற்று, இந்திய சதுரங்க சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து 15 வயதில் 1984இல் இவரது திறைமைக்காக சர்வதேச மாஸ்டர் (International Master) விருது கிடைத்தது.

இவர் சதுரங்கத்தில் மின்னல் போல் வேகமாக கலக்கியதால் இவருக்கு மின்னல் வேகக் குழந்தை(lightning kid)என்ற பட்டப் பெயர் கிடைத்தது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 4, 1987-இல், தனது 17வது வயதில் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

இந்தியாவின் புகழை, உலக அளவில் இட்டு சென்றவர்களில் விஷ்வநாதன் ஆனந்தும் குறிப்பிடத்தக்கவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments