Home Uncategorized மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதை …

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதை …

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் இருந்து கால் தட பதிவுகளை வைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். நகர் முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

மேலும் சிறுத்தை தென்பட்டால் தொடர்புகொள்ள செல்போன் எண்ணையும்(9626709017) வனத்துறையினர் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தொடர்ந்து மழலையர், தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேலான பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்க மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் பதுங்கியுள்ள சிறுத்தையை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version