Thursday, August 13, 2026
Homeசெய்திகள்முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பா? – எழும் கேள்விகள்!

முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பா? – எழும் கேள்விகள்!

சென்னையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆய்வு, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழா மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உள்ளிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்ற சமீபத்திய நிகழ்வுகள் எதற்கும் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

வழக்கமாக இதுபோன்ற முக்கிய அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பத்திரிகையாளர்கள் நேரடியாகப் பங்கேற்றுச் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவது நடைமுறையாகும். இருப்பினும், சமீபகாலமாக முதலமைச்சர் கலந்துகொள்ளும் இத்தகைய முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றியே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழ்வுகள் முடிந்த பின்னரே, அரசுச் செய்திக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் நலன் சார்ந்த அரசு நிகழ்வுகளில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாதது, பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments