Wednesday, February 4, 2026
HomeUncategorizedமாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு- மா சுப்ரமணியன்!

மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு- மா சுப்ரமணியன்!

5,76,000 மாணவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு  பயிற்சி தொடங்குவதன் மூலம் ஒரு கோடி மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்புள்ளது-மா சுப்ரமணியன்

சென்னை தி நகரில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 
பள்ளி மாணவர்கள் மூலம் 1 கோடி குடும்பங்களுக்கு நோய்த்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்  திட்டம்  

வளரிளம் பருவத்தினற்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் திட்டம் 

 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய சிறார் நலத்திட்டத்தின்   கீழ் பள்ளிச் செல்லும் குழந்தைகளை பரிசோதிப்பதற்காக மூன்று புதிய நடமாடும் மருத்துவக் குழுக்களை தொடங்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது இதில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  கலந்து கொண்டு மூன்று திட்டங்களை தொடங்கி வைத்தார்  இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தா வேலு, சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி  மற்றும்   துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் 

பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது

நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப கால நோய் கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன நோய்கள் ஏற்படுவதற்கு காரணமே விழிப்புணர்வு இல்லாமை தான்

ஆகையால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளில் இத்திட்டத்தை துவங்கவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் அதிகரிப்பை குறைப்பதற்கும் உடனடியாக உரிய மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இத்திட்டம் பெரிய அளவில் உறுதுணையாக இருக்கின்றது

அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற 16 ஆயிரத்து 566 பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற 5,76,000 மாணவர்களுக்கு தேசிய சிறார் நலத்திட்டத்தின் மூலம் மருத்துவ அலுவலர்களால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்

இந்த பயிற்சி மாணவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாது

5,76,000 மாணவர்களுக்கு இந்த பயிற்சி தொடங்குவதன் மூலம் ஒரு கோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்புள்ளது  இந்த மாணவர்களுக்கு சுகாதார தூதுவர்களாக கருதப்படுவார்கள்

வளரிளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

வளர் இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் திறன் பற்றிய விழிப்புனர்வு மூலம் அவர்களின் முடிவு எடுக்கும் திறன் சிக்கலை தீர்க்கும் திறன் உணர்வுகளை கட்டுப்படுத்துதல் மன அழுத்த மேலாண்மை ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்தும் திறன்களை உருவாக்குதல் போன்றவற்றை கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும்

அரசு மற்றும் அரசு உதவி வரும் பள்ளிகளில்  6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை நேரடியாக தேடிச் சென்று மருத்துவக் குழுக்களின் மூலம் மனநல ஆலோசனை குழுக்கள் மூலம் இதன் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுவதால் மாணவர்கள் மன அழுத்தம் போன்ற பல்வேறு விஷயங்களில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது

தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு  மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது

 தமிழ்நாட்டில் 805 மருத்துவ குழுக்கள்   மூலம் பிறந்த குழந்தை முதல் 18 வயதில் இருப்பவர்களுக்கு 30 வகையான நோய்களை கண்காணிப்பதற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு   மேல் சிகிச்சைக்கு அனுப்பி  சிகிச்சை அளித்து வருகின்றோம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments