Wednesday, June 10, 2026
Homeடிஜிட்டல்இன்ஸ்டாகிராம் & பேஸ்புக்கில் புதிய "Series" வசதி: தொடர்கதையாக ரீல்ஸ்களை வெளியிடும் வாய்ப்பு!

இன்ஸ்டாகிராம் & பேஸ்புக்கில் புதிய “Series” வசதி: தொடர்கதையாக ரீல்ஸ்களை வெளியிடும் வாய்ப்பு!

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளில் பயனர்களைக் கவரும் வகையில், மெட்டா நிறுவனம் தனது ரீல்ஸ் (Reels) வீடியோக்களுக்காக “சீரிஸ்” (Series) என்ற புதிய வசதியைச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம், வீடியோ உருவாக்குநர்கள் (Creators) தாங்கள் பதிவிடும் குறுகிய கால ரீல்ஸ் வீடியோக்களை சீரியல் எபிசோடுகள் போல, அதாவது தொடர்ச்சியான பாகங்களாக (Episodic collections) ஒழுங்கமைத்துத் தொகுக்க முடியும்.

இதன் மூலம் சமையல் குறிப்புகள், சவால்கள் அல்லது கதைகள் போன்ற பல பாகங்களைக் கொண்ட வீடியோக்களைப் பார்ப்பவர்கள், அடுத்தடுத்த பகுதிகளைத் தேடி அலைந்து ப்ரொஃபைலுக்குள் தேட வேண்டிய அவசியமில்லாமல், ஒரே இடத்தில் வரிசையாகப் பார்த்து மகிழலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிரியேட்டர்களுடன் மெட்டா நிறுவனம் தற்போது சோதனை செய்து வரும் இந்த “சீரிஸ்” வசதியில், பழைய ரீல்ஸ் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளதோடு, இதனைப் பின்தொடர்பவர்கள் சேமித்து வைத்துக் கொள்ளவும், புதிய எபிசோடுகள் வரும்போது அப்டேட் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments