Monday, August 10, 2026
Homeடிஜிட்டல்FREE Wi-Fi பயன்படுத்தாதீங்க! உங்கள் தகவல்களை ஹேக்கர்கள் திருடலாம்!..முக்கிய எச்சரிக்கை!

FREE Wi-Fi பயன்படுத்தாதீங்க! உங்கள் தகவல்களை ஹேக்கர்கள் திருடலாம்!..முக்கிய எச்சரிக்கை!

ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை (Guest Wi-Fi) சேவைகளைப் பயணிகள் நம்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதன் மூலம் பயனர்களின் மொபைல் திரை மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாதுகாப்பற்ற பொது வைஃபை நெட்வொர்க்குகளில் இணையம்போது, ஹேக்கர்கள் ‘மேன்-இன்-தி-மிடிள்’ (Man-in-the-Middle) போன்ற தாக்குதல்கள் மூலம் பயனர்களின் இணையப் போக்குவரத்தை வழிமறித்து, திரையில் தோன்றும் வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கண்காணிக்கவோ அல்லது பதிவு செய்யவோ முடியும்.

எனவே, பயணங்களின்போது பொது வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பாதுகாப்பான மொபைல் டேட்டா, தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் அல்லது விபிஎன் (VPN – Virtual Private Network) போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதே இத்தகைய இணையவழி அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழியாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments