Home செய்திகள் லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்… பேரன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!

லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்… பேரன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 5-ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தனது பேரனும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியின் பட்டமளிப்பு விழாவில் (Graduation ceremony) கலந்துகொள்ள உள்ள மு.க.ஸ்டாலின், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கேயே சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த காலத் தொடர் அரசியல் பணிகள் மற்றும் தேர்தல் ஓட்டங்களுக்குப் பிறகு, இந்த லண்டன் பயணத்தின் போது தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் செலவிட்டு ஓய்வெடுத்த பின்னர், வரும் ஜூலை 20-ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version