Wednesday, March 11, 2026
HomeUncategorizedஎவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர் ஏறுவதற்கான கட்டணத்தை உயர்த்த நேபாள அரசு முடிவு

எவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர் ஏறுவதற்கான கட்டணத்தை உயர்த்த நேபாள அரசு முடிவு

எவரெஸ்ட் சிகரத்தில் வெளிநாட்டவர் ஏறுவதற்கான கட்டணத்தை, 12 லட்சம் ரூபாயாக உயர்த்த நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட், நம் அண்டை நாடான நேபாளத்தில் உள்ளது. இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து, 29,000 அடி உயரத்தில் உள்ளது.  மலையேற்றத்தில் ஆர்வமுள்ள பலர், ஆண்டுதோறும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவதற்காக அங்கு குவிகின்றனர்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மலையேற்ற வீரர்கள் ஆர்வமுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த மலையேற்றத்தில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு நபர் ஒருவருக்கு, தலா 9 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது, கடந்த 2015 முதல் அமலில் உள்ளது.

இதை வரும் 2025 முதல், 12.30 லட்சம் ரூபாயாக உயர்த்த நேபாள சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அதே நேரம், நேபாளத்தை சேர்ந்ததோருக்கான கட்டணம், 75,000 ரூபாயாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments