மலை பகுதி என்பதால் உத்தரகாண்டின் கேதார்நாத் கோயிலுக்கு கோவேறு கழுதைகள் மீது அமர்ந்து பெரும்பாலான பக்தர்கள் செல்வார்கள்.
அவர்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் ரூ.500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ஆண்டு சுமார் 5.3 லட்சம் பக்தர்கள் கோவேறு கழுதைகள் மூலமாக சென்ற நிலையில் அந்த கழுதைகள் தங்களது உரிமையாளர்களுக்கு ரூ.101 கோடி வருமானம் ஈட்டி கொடுத்துள்ளது.

