பொதுவாக ஒரு கட்சி அல்லது அமைப்பின் மாநாடு நடந்தால் அதற்காக போடப்பட்ட சேர்கள் தாறுமாறு தாறுமாறாய் வீசப்பட்டு அலங்கோலமாக கிடப்பது வழக்கம்.
ஆனால் எந்த ஒரு மாநாட்டிலும் நடக்காத ஒரு செயலாக நிகழ்ச்சி முடிந்ததும் அதில் பங்கேற்றவர்களே தாங்கள் அமர்ந்திருந்த சேர்களை ஒழுங்காக அடுக்கி வைத்து சென்றது மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தான்.
இந்த மாநாடு எந்த சலசலப்புமின்றி அமைதியாக, கட்டுக்கோப்பாக நடந்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. மாநாட்டை எதிர்த்தவர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் மாநாட்டு அமைப்பாளர்கள்.

