லியோ படத்தின் “நா ரெடி” பாடல் புரோமோ வெளியீடு விஜய்யின் பிறந்த நாளான வரும் 22ஆம் தேதி வெளியாகிறது -“நா ரெடி” பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, இசை அனிருத் அமைக்கிறார்.
மேலும், இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இந்நிலையில் நா ரெடி பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பாடலை உங்கள் விஜய் பாடியுள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

