Tuesday, March 24, 2026
HomeUncategorizedநைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

நைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

ராணி எலிசபெத்தை தொடர்ந்து நைஜீரியாவின் “Gcon” விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி! பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Niger’ விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது.

இதன்மூலம் ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருதாக இந்த ‘The Grand Commander of the Order of the Niger’ விருது உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments