Saturday, March 21, 2026
HomeUncategorizedநாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது -பிரதமர் குற்றச்சாட்டு

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது -பிரதமர் குற்றச்சாட்டு

மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சி.வி.சி.) அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று குஜராத்தின் கேவடியாவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், காணொளி மூலம் கலந்துகொண்ட பேசினார் பிரதமர் மோடி.

அந்தக் காணொளியில் அவர், ஊழல், பெரியதோ அல்லது சிறியதோ, அது பொதுமக்களின் உரிமைகளை பறிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதுடன், அதற்கான கூட்டு முயற்சிகளையும் பாதிக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், தேசிய நலனுக்கு மாறாக அல்லது நம் மக்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய நலன் கருதி நமது பணியை தொடர வேண்டும்.

மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments