Home Uncategorized ‘நாய் சேகர்’ உலகமெங்கும் ஜனவரி 13 வெளியீடு

‘நாய் சேகர்’ உலகமெங்கும் ஜனவரி 13 வெளியீடு

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்துள்ள ‘நாய் சேகர்’ உலகமெங்கும் ஜனவரி 13 வெளியீடு 

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படமான ‘நாய் சேகர்’, ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநரான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய இயக்குநர், “ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் மையக்கரு. தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நாய் சேகர் அமைந்துள்ளது,” என்றார்.

Exit mobile version