சென்னை – திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் கால அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில் மதியம் 01:50 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும்.
மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 02:50 மணிக்கு புறப்படும் சென்னை – திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
திருநெல்வேலி – சென்னை 652கிலோமீட்டர் தூரத்தை 07 மணி நேரம் 50நிமிடங்களில் கடக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 83 கி.மீ தூரத்தை கடந்து செல்லும் இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவையை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.

