Sunday, March 22, 2026
HomeUncategorizedநாக சைதன்யாவின் தம்பிக்கு திருமணம் முடிந்தது! வெளியான புகைப்படங்கள்!

நாக சைதன்யாவின் தம்பிக்கு திருமணம் முடிந்தது! வெளியான புகைப்படங்கள்!

நாகார்ஜுனா லக்‌ஷ்மி டகுபதியை 1984ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு நாக சைதன்யா மகனாக பிறந்தார். 1990ம் ஆண்டு திருமணமாகி 6 ஆண்டுகளில் லக்‌ஷ்மியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை திருமணம் செய்துக் கொண்டார். நாக சைதன்யாவுக்கும் அமலாவுக்கும் பிறந்த மகன் தான் அகில் அக்கினேனி. அவரும் டோலிவுட்டில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார்.பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜைனப் ராவ்த்ஜி (Zainab Ravdjee) என்பவரை நாக சைதன்யாவின் தம்பி அகில் காதலித்து வந்தார். கடந்த நவம்பர் 24ஆம் தேதி இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று காலை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments