நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் வேதனை கருத்து.
60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது.
வெறும் 7% நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது – நீதிபதி.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது எனவும் நீதிபதி காட்டம்.

