தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதற்கட்டமாக சென்ற 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2வது கட்டமாக வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து, நாளை வாக்குபதிவு நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். 9-ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

