Home செய்திகள் நல்லகண்ணு இரங்கல் கூட்டத்தில் சர்ச்சை.. வசமாக சிக்கிய நக்கீரன் கோபால்!

நல்லகண்ணு இரங்கல் கூட்டத்தில் சர்ச்சை.. வசமாக சிக்கிய நக்கீரன் கோபால்!

நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்த ஐயா நல்லகண்ணு மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இரங்கல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் போது, நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் அங்கு அமர்ந்திருந்த ஒரு சிலர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு மாபெரும் மக்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில், இப்படி ஒரு பொறுப்பற்ற சிரிப்பு தேவையா என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தலைவரின் இறுதிப் பயணத்தில் கூடவா இந்த அலட்சியம்?’ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Exit mobile version