நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகளின் பட்டியலில், நான்காம் இடத்தில் இந்தியாவின் எஸ்.பி.ஐ.,

உலகில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகளின் பட்டியலில், நான்காம் இடத்தில் இந்தியாவின் எஸ்.பி.ஐ., வங்கி இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் 66 முன்னணி வங்கிகளை தர வரிசைப்படுத்தியுள்ளது.
அதில் உலகின் அனைத்து நாடுகளிலும் செயல்படும் முன்னணி வங்கிகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர் கள், நிதிச்சேவை வழங்குவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துகளின்படி, நம்பகத் தன்மை கொண்ட வங்கிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 70 பேர் இந்த கருத்து சேகரிப்பில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில், டாப் 10 இடத்தில் இருக்கும் நம்பகத்தன்மை கொண்ட வங்கிகள் விவரம்:
1.பேங்க் பி.சி.ஏ., - இந்தோனேசியா 2.டி.பி.எஸ்., குரூப் - சிங்கப்பூர் 3.பான்கோ தோ பிரேசில் - பிரேசில் 4.எஸ்.பி.ஐ., - இந்தியா
5.பேனர் பேங்க் - அமெரிக்கா 6.டொரண்டோ டொமினியன் - கனடா
7.யுனைடெட் பேங்க் - அமெரிக்கா 8.லாயட்ஸ் பேங்கிங் - பிரிட்டன் 9.எம்பேங்க் - போலந்து
10.எஸ்.என்.பி., - ஸ்விட்சர்லாந்து