Home Uncategorized நடைபயிற்சி சென்ற முதல்வரிடம் பெண்கள் கலந்துரையாடல்

நடைபயிற்சி சென்ற முதல்வரிடம் பெண்கள் கலந்துரையாடல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அங்கு பொதுமக்கள் சிலரும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆர்வமாக வந்து பேசினர். இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது.

முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர். சமீபத்தில் அவர், சாதனங்கள் உதவியுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. முதல்வர் ஸ்டாலின், சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். 

அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள், முதல்வரை வழிமறித்து உரையாடினர். அவரும் இயல்பாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

Exit mobile version