Wednesday, March 11, 2026
HomeUncategorizedநடிகை சமந்தா விவாகரம்? - மனம் திறந்த கணவர் நடிகர் நாக சைதன்யா

நடிகை சமந்தா விவாகரம்? – மனம் திறந்த கணவர் நடிகர் நாக சைதன்யா

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து கொண்டிருந்தவர்  நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்துக்குப் பிறகும் நடிகை சமந்தா படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது படங்களை கைவசம் வைத்துள்ளார். 

நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. 

இதுதொடர்பாக, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே சினிமா வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments