Home Uncategorized நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் – ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற...

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் – ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்

நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடிகள் அடுத்த மாதம் 9-ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்த ஆரம்பித்தது. அடுத்தடுத்து இருவரும் பிஸியாக இருந்ததால், தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Exit mobile version