Home Uncategorized நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது, ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நேற்றிரவு சென்றபோது, அவர் பயணித்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version