தலா என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். தமிழ்த் திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தான் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

