Wednesday, March 11, 2026
HomeUncategorizedநடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

தமிழ்திரையுலகில் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை இன்றும் பேசப்பட்டு வருகிறது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த செந்தில், தற்போது முதன்முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்நிலையில், நடிகர் செந்தில் இப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளார்களாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments