நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி உடல் நலம் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

