இட்லி கடை படத்தின் போட்டோவை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தனுஷ், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் இந்த போஸ்டர்களை பகிர்ந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
