புதுச்சேரி முதலமைச்சர் நேற்று திடீரென நடிகர் விஜயை அவரது வீடு தேடி சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு, கணிசமான இடங்களை கைப்பற்றியது நினைவுக்கூரத்தக்கது.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு விஜய் அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 19ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், விஜய் உடன் ரங்கசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
