Saturday, March 14, 2026
HomeUncategorizedநடிகர் விஜயுடன் ஜோடி சேரும் நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜயுடன் ஜோடி சேரும் நடிகை ராஷ்மிகா மந்தனா

சன் டிவி நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் விஜய்  இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம்  ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

 இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் போன்ற புகைப்படங்கள் மற்றும் பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments