நடிகர் வடிவேலு பல்வேறு பிரச்னைகளால், கடந்த சில வருடங்களாக அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதனிடையே, சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு, நடிகரும், எம்எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்து பேசியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

