கோலிவுட்டில் இப்போதைக்கு படு பிசியாக இருப்பவர் யோகிபாபு. இவர் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தன்னோட மேரேஜ் ரிசப்சன் வைக்க திட்டமிட்டு ஸ்டார் ஓட்டலில் அட்வான்ஸ் எல்லாம் கட்டி அழைப்பித்ழ் அடிச்சி பலருக்கும் விநியோகம் பண்ணிய சூழலில்தான் நாடெங்கும் கொரோனா தாக்குதலால் ஊரடங்கு அமல் ஆச்சு
அதனால் ரிசப்சனை தள்ளி வச்சிட்டு தன் பணியை செய்து வந்தார் ..
அதுக்கப்புறம் இவர் நடிச்ச ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆச்சு.. கூடவே ஒரு மகனும் பிறந்தார்
அந்த மகனுக்கு இன்னிக்கு முதலாவது பிறந்தநாளாம்..
அதை நேத்திக்கு கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த விழாவில் நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நேரில் வந்து குழந்தையை வாழ்த்தினார்.
அதோடு ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் வந்து குழந்தையை வாழ்த்திச் சென்றனர்.

