Home Uncategorized சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு

நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் புதிய கொடிமரம் மாற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை.

புதிய கொடிமரம் அமைக்க திட்சிதர்கள் எதிர்ப்பு – கொடி மரத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை. கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் கருத்து.

நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கொடிமரம் மாற்றுவதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இருதரப்பினரிடையே போலீசார் பேசி வருகின்றனர்.

Exit mobile version