Wednesday, February 4, 2026
HomeUncategorizedபழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்!

பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் நேற்று மாலை கோவிலுக்கு சென்றனர்.

Nayanthara

 பழனி அடிவாரத்தில் இருந்து ரோப் காரின் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற இவர்களை கோயில் அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம் பிரசாதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

Nayanthara

அங்கிருந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்த அவர்கள் காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களது புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments