Tuesday, May 5, 2026
Homeசெய்திகள்புதிய அரசியல் அலை: விஜய் வருகையால் கிழக்கு கடற்கரை களைகட்டியது!

புதிய அரசியல் அலை: விஜய் வருகையால் கிழக்கு கடற்கரை களைகட்டியது!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாகத் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவர் சந்தித்துப் பேசி வருவதால், பனையூர் பகுதியே தொண்டர் கடலில் மிதக்கிறது.

விடிய விடியக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தங்கள் தலைவரை ஒரு நொடியாவது பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாலையோர மரங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் மீது ஏறி நின்று உற்சாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வால், சென்னை கிழக்கு கடற்கரை சாலைப் பகுதி முழுவதும் தொண்டர்களின் கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments