Monday, March 23, 2026
Homeஉலகம்நியூயார்க் LaGuardia விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயங்கர விபத்து.. 70 பேர் படுகாயம்!

நியூயார்க் LaGuardia விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயங்கர விபத்து.. 70 பேர் படுகாயம்!

நியூயார்க் குவீன்ஸ் பகுதியில் உள்ள லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் CRJ-900 ரக விமானம் ஒன்று ஓடுதளத்தில் நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

சுமார் 100 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் மோதியதில், வாகனத்தில் இருந்த 5 தீயணைப்பு வீரர்கள் உட்பட பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தில் ‘Mass casualty incident’ எனப்படும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் வேளையில், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளும் கசிந்து வருகின்றன.

இந்த விபத்து காரணமாக லாகார்டியா விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் ஜே.எஃப்.கே (JFK) விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments