Sunday, March 22, 2026
HomeUncategorized6க்கும் பாதுகாப்பில்ல , 80க்கும் பாதுகாப்பில்ல ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி!

6க்கும் பாதுகாப்பில்ல , 80க்கும் பாதுகாப்பில்ல ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி!

கடலூரில் 80 வயது மூதாட்டியை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாத்ரூம் செல்வதற்காக அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மூதாட்டியை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு பாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளை பறித்து சென்று தப்பி சென்றனர். 

ரத்த காயங்களுடன் பாட்டி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினார் அப்போது மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பு எடுத்திய நிலையில், போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது  இது தொடர்பாக சுந்தரவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது சுந்தரவேல் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். 

திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்! கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, “அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய” அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.” என கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments