Saturday, July 11, 2026
Homeடிஜிட்டல்OTT தளங்களுக்கும் சென்சார் கட்டாயமா? மத்திய அரசு தீவிர ஆலோசனை!

OTT தளங்களுக்கும் சென்சார் கட்டாயமா? மத்திய அரசு தீவிர ஆலோசனை!

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 போன்ற ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களுக்கு, திரையரங்குப் படங்களைப் போல மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) அசல் சென்சார் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தற்போதைய விதிமுறைகளின்படி, ஓடிடி உள்ளடக்கங்கள் சென்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வராமல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் கீழ் தங்களின் படங்களை ஏஜ்-ரேட்டிங் (Age-based classification) மூலம் சுயத்தணிக்கை செய்துகொள்ளும் முறையே நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், சமீபகாலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் சில திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் தளங்களுக்கும் முறையான தணிக்கை சான்றிதழைக் கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments