பெரிய திரையில் வெளியாகி அதிகப்படியான ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக மாறியிருக்கும் “Manjummel Boys” படத்தை, OTT தளத்தில் வாங்க யாரும் பெரிதளவில் முன்வரலையாம்.
அதாவது தயாரிப்பாளர்கள் கேட்ட பணம் கூட இல்லாமல், குறைந்த விலைக்கே வாங்க முன்வருவதாக தகவல் வந்துருக்குது..
இது குறிச்சு வெளியாகியிருக்கும் தகவலின் படி, “மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியிருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தை வாங்குவதற்கு OTT தளங்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
தயாரிப்பாளர்கள் 20 கோடிக்கு விற்பனை செய்ய முன் வரும் நிலையில், வெறும் 10.5 கோடிக்கு மட்டுமே அதிகபட்ச விலைக்கு வாங்க முன்வந்துள்ளனர்.
இது மிகவும் குறைவான தொகை என்று தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்” என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திரையில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக மாறும் திரைப்படங்கள், தியேட்டரை விட்டு 2 அல்லது 3 மாதங்களுக்கு பிறகு தான் OTT தளங்களுக்கு வருவதால் அதற்கு அதிகவிலை கொடுத்து வாங்குவதில் லாபமில்லை என்று டிஜிட்டல் தளங்கள் தெரிவிப்பதாக கூறப்படுது.

