ஒவ்வோர் ஆண்டும் 560 பேரழிவுகள் ஏற்படும்; ஐநா கடும் எச்சரிக்கை

பருவகால மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போனால் ஒவ்வொரு ஆண்டும் 560 பேரழிவுகள் ஏற்படும் என ஐநா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2030ம் ஆண்டில் தீவிர வெப்ப அலைகளின் எண்ணிக்கை, 2001ம் ஆண்டில் இருந்ததுபோல் 3 மடங்கு இருக்கும். 30% அதிக வறட்சி நிலையும் காணப்படும்.
இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சரிவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகிய அனைத்தும் இந்த பருவகால மாற்ற எதிரொலியாக நடைபெறும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.