Wednesday, March 11, 2026
HomeUncategorizedபாஜகவில் எனக்கு பொறுப்பு எதுவும் தரவில்லை - நடிகர் பவர் ஸ்டார் குற்றச்சாட்டு

பாஜகவில் எனக்கு பொறுப்பு எதுவும் தரவில்லை – நடிகர் பவர் ஸ்டார் குற்றச்சாட்டு

பாஜகவில் பொறுப்பு தருகிறேன் என அழைத்து சென்று கடைசிவரை பொறுப்பு தரவில்லை, மரியாதையும் தரப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் கனகராஜ் மாநிலத் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை முன்னிலையிலும் தமிழக காங்கிரஸ் தகவல் அறியும் சட்டத்துறை மாநில துணை தலைவர் தலைமையில் ஜெஸிலின் காமடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சென்னை பிராட்வேயில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு தகவல் அறியும் சட்டதுறையில் தமிழக கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை,காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என மனதில் தோன்றியது இணைந்து விட்டேன் என தெரிவித்தார்

பாஜகவில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்:

எனக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை,கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை,பொறுப்பு தருகிறேன் என அழைத்து சென்று எதுவும் தரவில்லை எந்த அங்கீகாரமும் வழங்காத காரணத்தால் கட்சியில் இருந்து விலகியுள்ளேன் என தெரிவித்தார் மேலும் சரியான முறையில் மரியாதையாக நடத்தப்படவில்லை  என நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments