பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் படுதோல்வி கண்டது இந்தியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்கள், ஆஸ்திரேலியா 337 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்தியா 175 ரன்களுக்கு ஆல் அவுட் – ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்.
19 ரன்கள் இலக்கை எளிதில் எட்டியது ஆஸ்திரேலியா – 3 நாட்களுக்குள்ளாகவே முடிவடைந்த அடிலெய்டு டெஸ்ட். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலை.
