பெரும்பாலான இந்தியர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், சிங்கிளாகவே வாழ விரும்புவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,15 – 29 வயதிற்குட்பட்ட திருமணம் ஆகாத இளைஞர்களின் எண்ணிக்கை 2011ல் 20.8 சதவீதத்தில் இருந்து 2019ல் 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதே போன்ற போக்கை பெண்கள் மக்கள்தொகையிலும் காண முடிந்தது. 2011ல் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 13.5 சதவீதத்தில் இருந்து, 2019ல் 19.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன்படி, அதிக எண்ணிக்கையில் திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது.
உத்தரபிரதேசம், டில்லி, பஞ்சாப் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறைந்த திருமணமாகாத இளைஞர்கள் கொண்ட மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளன.

