நடப்பாண்டு பி.எட். படிப்பிற்கு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரி கல்விஇயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்டம்பர்-30ம் தேதி) வெளியிடப்படுகிறது.
எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது.
