Home Uncategorized பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் டிங் டாங் படத்தின் பூஜை...

பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் டிங் டாங் படத்தின் பூஜை படப்பிடிப்பு ஆரம்பமானது

பல்வேறு  படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.

இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். WeAllProduction, RRPictures  தயாரிக்கும் ‘டிங் டாங் ‘ படத்திற்கு  ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள்  வீரா .தயாரிப்பு ராபர்ட் ராக் .

சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக இருக்கும் இந்தப் படம், பல்வேறு வணிக அம்சங்களுடன்  நகைச்சுவையும் கலந்து உருவாகிறது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version