Home Uncategorized பல லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம். திமுகவினரிடையே கைகலப்பு. ஒருவருக்கு தலையில் பலத்த காயம்.

பல லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம். திமுகவினரிடையே கைகலப்பு. ஒருவருக்கு தலையில் பலத்த காயம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் கலந்துகொள்ளவந்த திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது. இதில் பங்கேற்க திமுக மாவட்ட துனை செயலார் சேங்கை மாறன் மற்றும் பல திமுக ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் திடிரென திமுக மாவட்ட துனை செயலாளர் சேங்கைமாறன் அனியினருக்கும் அதே திமுகவை சேர்ந்த கோவானூர் சோமன் என்பவரது அனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த சேரை கொண்டு தாக்கி கொண்டதில் சோமன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடந் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version