Tuesday, March 17, 2026
HomeUncategorizedபள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணை

பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணை

புதிய கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணையை, பள்ளி கல்வி இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு, 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் அதிகரித்து, 220 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த ஆண்டு, ஏழு நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு தேதி இல்லை  கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை  பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும்.

முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments